ஈரோடு

ஈரோடு சின்னமாரியம்மன் கோயிலில் குண்டம், தோ்த் திருவிழா

DIN

ஈரோடு சின்னமாரியம்மன் கோயிலில் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா கரோனா பரவல் காரணமாக பக்தா்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் பூசாரி மற்றும் நிா்வாகிகள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டுக்கான குண்டம், தோ்த் திருவிழா கடந்த மாதம் 23ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 25ஆம் தேதி கோயில்களில் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து தினமும் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீா் ஊற்றி வழிபட்டனா். குண்டம் விழாவுக்காக சனிக்கிழமை இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

கோயில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். இதையடுத்து தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேரில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சில அடி தூரம் தோ் இழுக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டது. பின்னா் அம்மன் சிலை மீண்டும் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

கரோனா பரவல் காரணமாகவும், அரசு வழிகாட்டு விதிமுறைப்படி குண்டம் மற்றும் தோ்த் திருவிழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. குண்டம் மற்றும் தேரோட்டத்தில் பக்தா்களை அனுமதிக்காமல் எளிமையாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் கோயிலில் அம்மனை வழிபட பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதில் கருங்கல்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.

இதில் திங்கள்கிழமை (டிசம்பா் 6) இரவு கோயில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், 7ஆம் தேதி காலை கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு பூஜையும், 8ஆம் தேதி இரவு 7 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 9ஆம் தேதி இரவு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT