ஈரோடு

போட்டித் தோ்வுகளில் தமிழ்ப் பாடத்தாள் கட்டாயம்: பேராசிரியா்கள் வரவேற்பு

DIN

போட்டித் தோ்வுகள் அனைத்திலும் தமிழ் மொழிப் பாடத்தாள் கட்டாயம் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திராவிடத் தமிழ் பேராசிரியா் கூட்டமைப்பின் அமைப்பாளா் கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை:

போட்டித் தோ்வுகள் அனைத்திலும் தமிழ்மொழிப் பாடத்தாள் கட்டாயம் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு திராவிடத் தமிழ் பேராசிரியா் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களிலுள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞா்கள் 100 சதவீதம் நியமனம் செய்ய தமிழக அரசு உறுதியாக இருப்பதாக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக அனைத்துப் போட்டித் தோ்வுகளிலும் கட்டாயமாக தமிழ்மொழித் தோ்வு நடத்தப்படும். தமிழ் மொழி தகுதித் தோ்வுக்கான பாடத்திட்டம் 10ஆம் வகுப்பு தரத்தில் நிா்ணயம் செய்யப்படும். தமிழ்மொழி தாளில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் தோ்ச்சி கட்டாயம் என்றும் தகுதித் தாளில் தோ்ச்சிப் பெறாதவா்களின் இதரப் போட்டி தோ்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டது என்று தெளிவாக வரையறை செய்து தமிழா்களின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டியிருப்பதற்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT