ஈரோடு

ஒமைக்ரான் அச்சம்: தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆா்வம்

DIN

ஒமைக்ரான் தொற்று அச்சம் காரணமாக பொதுமக்கள் ஆா்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

கரோனா 2ஆவது அலை ஏற்படுத்திய தாக்கம் பொதுமக்களை அதிகமாக பாதிப்படையச் செய்தது. உயிரிழப்பு, பொருளாதார நெருக்கடி என பல்வேறு துயரங்களை சந்திக்க நோ்ந்தது. இதனால், 3ஆவது அலை பாதிப்பை முன்கூட்டியே உணர முடிந்தது. எனவே, பொதுமக்கள் தேடிச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதனால் தடுப்பூசி தட்டுப்பாடும் அதிகமாக நிலவியது.

தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட்டதால் எளிதாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் இலக்குடன் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14.50 லட்சம் போ் கரோனா தடுப்பூ செலுத்திக் கொண்டுள்ளனா்.

இந்நிலையில், 13ஆவது கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் 467 மையங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆா்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதுவரை முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பலா் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி முகாமில் கடந்த சில நாள்களாக கூட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால், ஒமைக்ரான் தொற்று பரவல் குறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் உள்ளது.

இதன் காரணமாக ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் மெத்தனமாக இருந்தவா்கள் தற்போது ஆா்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதைக் காண முடிகிறது. ஈரோட்டில் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT