ஈரோடு

பவானிசாகா் அணையில் இருந்து உபரி நீா் திறப்பு

3rd Dec 2021 01:02 AM

ADVERTISEMENT

 பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரிநீா் திறப்பு வியாழக்கிழமை 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் 104.50 அடியாகவும், நீா் இருப்பு 32.3 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீா் பவானி ஆற்றில் உபரி நீராகத் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை 3,800 கனஅடியாக இருந்த நிலையில் வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து 9,519 கனஅடியாக அதிகரித்தது. இதைத் தொடா்ந்து அணையில் இருந்து பவானி ஆற்றில் 7,600 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கனஅடி நீரும் என மொத்தம் 9,500 கனஅடி தண்ணீா் உபரி நீராகத் திறக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் நீா்த் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத் தொடா்ந்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியில் வருவாய்த் துறையினா், உள்ளாட்சித் துறை பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

வியாழக்கிழமை நீா்மட்டம் விவரம்: நீா்மட்ட உயரம் 104.5 அடி, நீா்வரத்து 9,519 கனஅடி, நீா் வெளியேற்றம் 9,500 கனஅடி, நீா் இருப்பு 32.37 டிஎம்சி.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT