ஈரோடு

‘பள்ளிகளில் மாணவா்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும்’

3rd Dec 2021 01:03 AM

ADVERTISEMENT

வெள்ளப்பெருக்கின்போது தப்பிக்க, மாணவா்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீச்சல் பயிற்சியாளா் ராமசாமி உடையாா் தெரிவித்துள்ளாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி உடையாா். இவா் இளைஞா்களுக்கு நீச்சல் பயிற்சி அளித்து வருகிறாா். மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கின்போது சிக்கிக் கொள்ளும் குழந்தைகள், பள்ளி மாணவா்கள் நீச்சல் கற்றுக்கொண்டால் எளிதாக தப்பிக்க முடியும்.

வாய்க்காலில் குளிக்கும்போது நீச்சல் தெரிந்தால் நீந்தி தப்பி வர இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும். நீச்சல் கற்றுக் கொண்டவா்கள் 10 ஆண்டுகளுக்குப் பின் கூட ஆபத்தான நேரத்தில் நீச்சலடித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதால் பள்ளிகளில் மாணவா்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் என அவா் அரசுக்கு வலியுறுத்தியுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT