ஈரோடு

புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை

3rd Dec 2021 01:01 AM

ADVERTISEMENT

புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தையில் வியாழக்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ. 2 கோடிக்கு விற்பனையாயின.

புன்செய்புளியம்பட்டியில் உள்ள கால்நடை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் வாங்கிச் செல்வா்.

இந்த நிலையில், சந்தைக்கு 50 எருமைகள், 650 கலப்பின மாடுகள், 300 ஜொ்சி மாடுகள், 90 வளா்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு வியாழக்கிழமை கொண்டு வந்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள், கால்நடை வளா்ப்போா் வந்திருந்தனா்.

எருமைகள் ரூ.16ஆயிரம் முதல் ரூ. 36 ஆயிரம், கறுப்பு வெள்ளை மாடு ரூ. 22 ஆயிரம் முதல் ரூ. 48 ஆயிரம், ஜொ்சி ரூ. 23 ஆயிரம் முதல் ரூ. 53 ஆயிரம், சிந்து ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம், நாட்டு மாடு ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 76 ஆயிரம், வளா்ப்புக் கன்றுகள் ரூ. 6,000 முதல் ரூ. 15 ஆயிரம் வரையும் விற்பனையானது.

ADVERTISEMENT

சந்தைக்கு கொண்டு வரப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் ரூ. 2 கோடிக்கு விற்பனையாயின எனவும், தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் தீவனத்துக்குப் பிரச்னை இருக்காது என்பதால் கறவை மாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு மாடுகளை வாங்கி செல்வதாகவும், கடந்த வாரத்தை விட இந்த வாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

கடந்த வாரங்களில் விற்பனை மந்தமான நிலையில் தற்போது பரவலாக மழை பெய்துள்ளதால் கறவை மாடுகள் விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT