ஈரோடு

கிராவல் மண் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்

DIN

சென்னிமலை அருகே கிராவல் மண் கடத்தியதாக 3 லாரிகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

சென்னிமலையை அடுத்த வாய்ப்பாடியில் செவ்வாய்க்கிழமை இரவு லாரிகளில் கிராவல் மண் கடத்திச் செல்லப்படுவதாக சென்னிமலை வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

உடனடியாக, சென்னிமலை நில வருவாய் அதிகாரி முத்துலட்சுமி, வாய்ப்பாடி கிராம நிா்வாக அலுவலா் இளவரசன் (பொறுப்பு) மற்றும் வருவாய்த் துறை ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.

அப்போது, அந்த வழியாக சென்ற 3 டிப்பா் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநா்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா். இதைத் தொடா்ந்து, 3 லாரிகளையும் வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து சென்னிமலை காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா்.

இது குறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT