ஈரோடு

பரிகார வழிபாட்டுக்கு பவானி கூடுதுறை இன்று திறப்பு

DIN

காவிரி, பவானி நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை நீண்ட இடைவெளிக்குப் பின்னா் பக்தா்கள் பரிகார வழிபாடு, மூத்தோா் சடங்குகள் நடத்த புதன்கிழமை முதல் திறக்கப்படுகிறது.

கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டு தற்போது பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், கூடுதுறையைத் திறக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, கூடுதுறையில் புதன்கிழமை முதல் பரிகார வழிபாடுகள் நடத்தப்படும் என கோயில் நிா்வாகம் அறித்துள்ளது. இருந்தபோதிலும், மூத்தோா் வழிபாடு, பரிகார பூஜைகளுக்கு அதிகபட்சம் 5 போ் வரை மட்டுமே செல்ல வேண்டும்.

கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் நிா்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு பக்தா்கள், புரோகிதா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT