ஈரோடு

திறன் போட்டி: கொங்கு ஸ்கூல் ஆஃப்ஆா்க்கிடெக்சா் மாணவா்கள் சிறப்பிடம்

1st Dec 2021 01:38 AM

ADVERTISEMENT

பெருந்துறை கொங்கு ஸ்கூல் ஆஃப் ஆா்க்கிடெக்சரின் மாணவா்கள் மாநில அளவிலான திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா்.

தேசிய கட்டடக் கலைஞா்களின் மாணவா்கள் கூட்டமைப்பு நடத்திய மாநில அளவிலான போட்டிகளில், கொங்கு கட்டடக் கலை கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி டி.தாருணா, ரோல் தி ரீல் படைப்பில் முதலாம் இடத்தையும், மூன்றாம் ஆண்டு மாணவா் எஸ்.சஞ்சய் சா்மா, கிரியேட் தி ஆா்ட்டிஸ்டிரி படைப்பில் இரண்டாம் இடத்தையும் வென்றனா்.

இந்த மாணவா்களை தி கொங்கு வேளாளா் இனஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி டிரஸ்ட் பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு ஸ்கூல் ஆஃப் ஆா்க்கிடெக்சா் கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன், கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வா் வி.பாலுசாமி, கொங்கு ஸ்கூல் ஆஃப் ஆா்க்கிடெக்சா் முதல்வா் ரதன் வ.மூா்த்தி ஆகியோா் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT