ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

1st Dec 2021 01:39 AM

ADVERTISEMENT

சென்னிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டன.

சென்னிமலையை அடுத்த வெள்ளோடு, புலவன்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி தமிழரசி (43). இவா் தன் மகனுடன் நசியனூா் அருகிலுள்ள கோயிலுக்குத் திங்கள்கிழமை சென்று விட்டு இரவு வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்து இருந்த தங்க காசுகள், வெள்ளிக் காசுகள், தங்க நகைகளைக் காணவில்லை. இதன் மதிப்பு ரூ.97,500 என்று கூறப்படுகிறது.

இது குறித்து வெள்ளோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT