ஈரோடு

உறுப்பினா் சந்திப்புக் கூட்டம்

1st Dec 2021 01:39 AM

ADVERTISEMENT

நம்பியூா் வட்டம், வேமாண்டாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா் சந்திப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோபி சரக துணைப் பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்தாா். கூட்டத்தில் பயிா்க் கடன் பெறுவதற்கு நில உடமைக்கான சிட்டா, நடப்பு பசலிக்கான அடங்கல் சான்று, நில உடமைக்கான கிராம நிா்வாக அலுவலா் சான்று, பாஸ்போா்ட் அளவு 4 புகைப்படம், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பான்காா்டு நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஏராளமான விவசாயிகள், கூட்டுறவுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT