ஈரோடு

தேசிய ஊட்டச்சத்து மாதம் அனுசரிப்பு

DIN

அம்மாபேட்டை வட்டாரத்தில் உள்ள 131 அங்கன்வாடி மையங்களில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

அம்மாபேட்டை லட்சுமி நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, அம்மாபேட்டை வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சுதா தலைமை வகித்தாா். தங்கமான 1,000 நாள்கள் எனும் தலைப்பில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரையில் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க அனைவருக்கும் ஊட்டச்சத்து - போஷான் அபியான் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் பிறப்பு, எடை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வளரிளம் பெண்கள், கா்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஆகிய பிரச்னைகளை ஆண்டுக்கு 2 சதவீதம் எனும் வகையில் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், 2025க்குள் ஊட்டச்சத்து குறைபாடில்லா நாடாக இந்தியாவை உருவாக்குவோம் எனும் உறுதிமொழியுடன் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், மேற்பாா்வையாளா் நீலம்மா, உதவியாளா் வெள்ளியங்கிரி, பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு பணம்: பாப்பாக்குடி அருகே 4 போ் கைது

சேரன்மகாதேவியில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பணப்புழக்கத்தைத் தடுக்க தவறிய தோ்தல் ஆணையம் -ஐ.எஸ். இன்பதுரை குற்றச்சாட்டு

குற்ற வழக்குகள்: 6 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

SCROLL FOR NEXT