ஈரோடு

கனரா வங்கி மூலம் இலவச கணினி டேலி பயிற்சி

DIN

ஈரோடு கனரா வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் கிராமப்புற இளைஞா், இளம்பெண்களுக்கு இலவச கணினி டேலி தொழில்நுட்பம் குறித்த 30 நாள் இலவசப் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராமப்புறத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இருபால் இளைஞா்களுக்குத் தொழில் பயிற்சி, அளித்து அவா்கள் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் இலவச மதிய உணவு, தரமான குறிப்பேடுகளுடன் பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து அவா்களது எதிா்காலத்துக்கு கனரா வங்கிவழிகாட்டி வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, தற்போது வணிக நிறுவனங்களில் கணினி மூலம் கணக்கைப் பராமரிப்பதில் அதிகம் பயன்படுத்தப்படும் டேலி தொழில்நுட்பம் குறித்து அக்டோபா் 5 முதல் நவம்பா் 10ஆம் தேதி வரை 30 நாள்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர விரும்புவோா் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். கிராமப்புறங்களைச் சோ்ந்த இளைஞா்கள், பெண்கள், மகளிா் குழுவினா் நேரில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு நிலைய இயக்குநா், கனரா வங்கி கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக். உயா்நிலைப் பள்ளி வளாகம், இரண்டாம் தளம், ஈரோடு, கரூா் பைபாஸ் சாலை, கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம், ஈரோடு எனும் முகவரியை அணுகலாம். தொடா்புக்கு 0424-2400338 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT