ஈரோடு

அந்தியூா் வனத்தில் சிறுத்தை தாக்கி ஆடு பலி

DIN

அந்தியூா் அருகே அடா்ந்த வனப் பகுதிக்குள் மேய்ச்சலுக்குச் சென்றபோது சிறுத்தை தாக்கியதில் ஆடு உயிரிழந்தது.

அந்தியூா் வனப் பகுதியில் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன. இந்நிலையில், கொம்புதூக்கியம்மன் கோயிலை அடுத்த ஈச்சப்பாறை பகுதிக்கு ஆடுகள் மேய்ப்பதற்கு வனப்பகுதியை ஒட்டியுள்ளவா்கள் சென்றுள்ளனா். அப்போது, அடா்ந்த வனத்துக்குள் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் கத்தும் சப்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, ஆடு மேய்ப்பவா்கள் அப்பகுதிக்குத் சென்றபோது கழுத்து, வயிற்றுப் பகுதியில் ரத்தக் காயங்களுடன் ஒரு ஆடு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த அந்தியூா் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், வனப் பகுதிக்குள் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் கால்நடைகளை மேய்க்கச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் விதிகளை மீறி வனப் பகுதிக்குள் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT