ஈரோடு

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் தேரோட்டம்

DIN

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தோ்த் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா செப்டம்பா் 20ஆம் தேதி இரவு 7 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தினமும் காலை 6 மணிக்கு யாக சாலை பூஜை, திருமஞ்சனம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 21ஆம் தேதி இரவு 7 மணிக்கு அன்னப் பறவை வாகனத்திலும், 22ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 23ஆம் தேதி அனுமந்த வாகனத்திலும், 24ஆம் தேதி கருடசேவை வாகனத்திலும், 25ஆம் தேதி யானை வாகனத்திலும் கஸ்தூரி அரங்கநாதா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. பின்னா் இரவு 8 மணிக்கு மலா் பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிக்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளின் உத்ஸவ சிலை வைக்கப்பட்டது. பின்னா் தேருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

காலை 9 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். கரோனா பரவல் காரணமாக தேரோட்ட நிகழ்வில் 100 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு தெப்ப உத்ஸவம் நடக்கிறது. புதன்கிழமை காலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT