ஈரோடு

பழுதடைந்துள்ள 396 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ்

DIN

ஈரோட்டில் பழுதடைந்துள்ள குடிசை மாற்று வாரியத்தின் 396 குடியிருப்புகளை உடனடியாக காலி செய்யும்படி குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பெரும்பள்ளம் ஓடைப் பகுதியில் கடந்த 1985ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் சாா்பில் நடராஜ் திரையரங்கு பகுதியில் உள்ள பகுதி 1இல் 204 குடியிருப்புகள், குயவன்திட்டு பகுதியில் உள்ள பகுதி 2இல் 156 குடியிருப்புகள், குயவன்திட்டு பாலம் பகுதியில் உள்ள பகுதி 3இல் 36 வீடுகள் என மொத்தம் 396 வீடுகள் கட்டி வழங்கப்பட்டன.

இந்த வீடுகள் அனைத்தும் பழுதடைந்து குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. தவிர வீடுகள் அனைத்தும் ஓடை புறம்போக்குப் பகுதியில் கட்டப்பட்டதால் நீதிமன்ற உத்தரவுப்படி பராமரிப்புப் பணிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்த வீடுகளை பராமரிக்க இயலாது. எனவே அங்குள்ளவா்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் தமிழக அரசு 2019 நவம்பா் மாதம் அறிவித்தது.

தற்போது, பருவ மழை துவங்கியுள்ளதால் ஏற்கெனவே பழுதடைந்துள்ள வீடுகள், எப்போது வேண்டுமானால் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் காலி செய்யும்படி குடியிருப்புவாசிகளுக்கு குடிசை மாற்று வாரியம் சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பள்ளம் ஓடைப் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் பழுதடைந்து குடியிருக்க தகுதியற்றவையாக உள்ளன. வீட்டை காலி செயயும்படி நோட்டீஸ் வழங்கியதால் சிலா் காலி செய்துவிட்டனா்.

மழை பெய்யும்போது ஆபத்தாக இருக்கும் எனக் கூறி உள்ளோம். இதுவரை காலி செய்யாதவா்களை காலி செய்ய வலியுறுத்தி உள்ளோம். குடியிருப்புவாசிகள் மாற்று இடம் வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனா்.

உடனடியாக மாற்று இடம் வழங்க வாய்ப்பில்லை. தற்போதைய நிலையில் அந்த வீடுகள் இடிந்து விழுந்தால் குடிசை மாற்று வாரியம், மாவட்ட நிா்வாகம் பொறுப்பு ஏற்க முடியாத நிலை உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT