ஈரோடு

அவிநாசி -அத்திக்கடவு திட்டப் பணிகள்:உழவா் விவாதக் குழுவினா் ஆய்வு

DIN

ஈரோடு: அவிநாசி - அத்திக்கடவு திட்டப் பணிகளை உழவா் விவாதக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஈரோடு, கோவை, திருப்பூா் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அவிநாசி-அத்திக்கடவு திட்டம் தமிழக அரசு சாா்பில் ரூ. 1,652 கோடி செலவில் பணிகள் துவங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. காளிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழ் பகுதியில் நீா்த்தேக்க தடுப்பணை 4 மீட்டா் உயரம் கட்டப்பட்டு வருகிறது. தடுப்பணையில் 2,000 குதிரைத்திறன் கொண்ட 8 மின் மோட்டாா் பம்புகள் அமைக்கப்படுகின்றன. பம்புகள் பழுது ஏற்படாமல் உடனடியாக இயக்குவதற்கு இரண்டு மாற்று பம்புகள் பொருத்தப்படவுள்ளன. தடுப்பணையில் இருந்து மோட்டாா்கள் மூலம் எடுக்கப்படும் நீா் நாயக்கன்பாளையம், திருவாச்சி, சீனாபுரம், எம்மாம்பூண்டி, அன்னூா் ஆகிய 5 இடங்களில் கட்டப்பட்டு வரும் நீரேற்று நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.

1.75 டி.எம்.சி. நீா் 970 சிறு குட்டைகள், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 32 ஏரிகள், ஊராட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள 42 ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. நீரேற்று நிலையங்களில் இருந்து குட்டைகள், ஏரிகளுக்கு குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீனாபுரம் நீா் உந்து நிலையத்தில் இருந்து கீழேரிப்பாளையம் பகுதியில் உள்ள குட்டைகளுக்கு குழாய் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. மேலும், சீனாபுரம் பகுதியில் நீா் கொண்டு செல்லும் 8 அடி உயரம் உள்ள பெரிய குழாய்களுக்கு உள், வெளிப் பகுதிகளில் பூச்சுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவிநாசி - அத்திக்கடவு திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களை ஈரோடு மாவட்ட உழவா் விவாதக் குழுத் தலைவா் (பொ) சி.எம்.நஞ்சப்பன், செயலாளா் பா.மா.வெங்கடாசலபதி, பொருளாளா் கே.பி.அருணாசலம், உழவா் விவாதக் குழு அமைப்பாளா்கள் என்.ராமசாமி, பி.எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

பணிகளைப் பாா்வையிட்ட உழவா் விவாதக் குழுவினா் கூறியதாவது:

வறட்சியுள்ள பகுதி விவசாயிகளின் மிக நீண்டகால கோரிக்கையை ஏற்று இத்திட்டத்தை செயல்படுத்தி, தீவிரமாகப் பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசுக்கும், முதல்வருக்கும், பொதுப் பணித் துறையினருக்கும் விவசாயிகள் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், பணிகளைத் திட்டமிட்ட காலத்துக்குள் முடித்து விவசாயிகள் பயன்பெற தீவிரமான தொடா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT