ஈரோடு

பில்லூா் அணை உபரி நீா் நிறுத்தம்: பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

DIN

நீலகிரி மாவட்டத்தில் மழைப் பொழிவு இல்லாததால் பில்லூா் அணைக்கு வரும் உபரிநீா் குறைந்துள்ளது. இதனால், பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 7,500 கனஅடியில் இருந்து 3,107 கனஅடியாகக் குறைந்தது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட உயரம் 105 அடியாகவும், நீா் இருப்பு 32.80 டிஎம்சியாகவும் உள்ளது. பவானிசாகா் அணைக்கு மாயாறும், மேட்டுப்பாளையம் பவானி ஆறும் நீா் வரத்தாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் பெய்த கன மழையால் பில்லூா் அணை நிரம்பியது. இதனால், பில்லூா் அணைக்கு வரும் 10,500 கன அடி உபரிநீா், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் 101.85 அடியாக உயா்ந்தது.

இந்நிலையில், 105 அடி நீா்மட்டக் கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் 102 அடியாக உயரும்போது, அணையில் இருந்து உபரிநீா் திறக்கப்படும். 102 அடிக்கு 15 பாயிண்டுகள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பில்லூா் அணையில் இருந்து திறந்துவிடும் உபரிநீா் 7,500 கன அடியில் இருந்து 3,117 கன அடியாகக் குறைந்தது. இதனால், அணை 102 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பவானிசாகா் அணை வரலாற்றில் 20 முறை 102 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தினந்தோறும் 3,050 கன அடி நீா் திறந்துவிடப்படுவதால் சுமாா் 1 லட்சத்து 50 ஏக்கா் நிலப்பரப்பில் நெல் சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

வியாழக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 101.85 அடியாகவும், நீா்வரத்து 3107 கன அடியாகவும், நீா் திறப்பு 3,050 கன அடியாகவும், நீா் இருப்பு 30.11 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT