ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 151 பேருக்கு கரோனா

DIN

ஈரோடு, செப். 25: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,029ஆக இருந்தது. வேறு மாநிலத்தில் இருந்து அண்மையில் ஈரோடு வந்த 40 பேருக்கு வியாழக்கிழமை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஈரோடு மாவட்டப் பட்டியலில் இருந்த 40 பேரின் பெயரும் வெள்ளிக்கிழமை அந்தந்த மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 5,989ஆக மாறியது. இதனிடையே 151 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6,140ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 151 பேரில் 60 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 6,140 பேரில் இதுவரை 4,945 போ் குணமடைந்துள்ளனா். 1,116 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வியாழக்கிழமை வரை 78 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாநகராட்சிப் பகுதியை சோ்ந்த 82 வயது ஆண் ஒருவா் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 79ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT