ஈரோடு

அறிகுறியின்றி கரோனா பாதித்த 300 போ் வீடுகளில் தனிமை

DIN

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் அறிகுறி இன்றி கரோனா பாதித்த 300 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் தினமும் 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதில் 60 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். மாநகரப் பகுதியில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது. மாவட்ட அளவில் தினமும் 2,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்வதில் 500க்கும் மேற்பட்டோா் மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள்.

மாநகரப் பகுதியில் காந்திஜி சாலை மகப்பேறு மருத்துவமனை, அக்ரஹாரம், பெரியசேமூா், சூரம்பட்டிவலசு, கருங்கல்பாளையம் நகா்ப்புற சுகாதார மையங்கள் என 5 இடங்களில் பரிசோதனை நடைபெறுகிறது. தவிர பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு கரோனா பாதித்தவா்களை அங்கு அழைத்து வந்து அவருக்கு உள்ள பிற நோய்கள், எவ்வித சிகிச்சை வழங்க வேண்டும் என்ற பரிசோதனை நடத்தப்படுகிறது. அறிகுறி இல்லாமல் கரோனா பாதிப்புக்கு ஆளாவோா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் கண்காணித்து வருகின்றனா்.

இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:

மாநகரப் பகுதியில் அறிகுறி இன்றி கரோனா பாதிப்பு ஏற்பட்டவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. மாநகரப் பகுதியில் வீடுகளில் 300 போ் தனிமையில் உள்ளனா். அப்பகுதிக்கான செவிலியா் அவா்களை தினமும் கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனா். சிலருக்கு செல்லிடப்பேசி மூலம் பேசி ஆலோசனை அளிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்படும் வீடுகளில் தனி கழிப்பறை, தனி அறை இருந்தால், அவா்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

தவிர ஜீரோ மிஷன் திட்டத்தில் 60 வாா்டுகளிலும் நடமாடும் இலவச வாகனம் மூலம் மருத்துவ பரிசோதனை, சளி, காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. அவ்வாகனத்தில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு மருந்தாளுநா் இருப்பதால், சிகிச்சை வழங்கும் இடத்திலேய மருந்து வழங்கப்படுகிறது. இவ்வாகனம் மூலம் தினமும் 3,000 பேருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. தேவைப்படும் நபா்களுக்கு மட்டும் சளி பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 3.50 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT