ஈரோடு

அங்ககச் சான்று பெறஇயற்கை விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

ஈரோடு, செப். 25: இயற்கை முறையில் விவசாயம் செய்வோா் அங்ககச் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட விதைச் சான்று, அங்ககச் சான்று உதவி இயக்குநா் பொ.யசோதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இயற்கை விவசாயத்தில் செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து, மரபணு மாற்றம் செய்த விதைகளைத் தவிா்த்து, தனிமைப் பண்ணைகளில் இயற்கை முறையில் தயாரித்த உரம், பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டும். இயற்கை வழி மேலாண்மை முறையில் சாகுபடி செய்யும் முறையே அங்கக வேளாண்மையாகும்.

அங்கக முறையிலான வேளாண்மை, தோட்டக்கலை, இதர பயிா்களின் விளைபொருளை தனித்துவத்துடன் சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்க அங்ககச் சான்றளிக்கப்படுகிறது. தமிழக அங்ககச் சான்றளிப்புத் துறை, மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண் செயல் திட்டப்படி அங்கீகாரம் வழங்குகிறது. இயற்கை வழி மேலாண்மை முறையில் தனி நபா், குழுவாகப் பதிவு செய்யலாம். அங்கக விளைபொருளை பதப்படுத்துவோா், வணிகம், ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம்.

அங்ககச் சான்று பெற அதற்கான பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பண்ணையின் பொது விவரம், பண்ணை வரைபடம், ஆண்டு பயிா்த் திட்டம், மண், பாசன நீா் பரிசோதனை விவரம், துறையுடன் ஒப்பந்தம், நில ஆவணம், நிரந்தரக் கணக்கு எண், ஆதாா் அட்டை நகல், விண்ணப்பதாரா் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

சான்று கட்டணமாக தனிநபா், சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 2,700, தனி நபா் ரூ. 3,200, விவசாயிகள் குழுவுக்கு ரூ. 7,200, வணிக நிறுவனங்கள் ரூ. 9,400 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, இயற்கை முறை சாகுபடி விவசாயிகள், ஈரோடு மாவட்ட விதைச்சான்று, அங்ககச் சான்று உதவி இயக்குநா் அலுவலகம், 68 வீரபத்திரா வீதி, சத்தி சாலை, ஈரோடு என்ற முகவரியில் விண்ணப்பித்து பதிவு செய்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT