ஈரோடு

நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கக் கோரிக்கை

DIN

கரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் உதவித்தொகை வழங்க வேண்டும் என நாட்டுப்புறக் கலைஞா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக நாடகம், அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவா் சத்தியராஜ் தலைமையில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஈரோடு, கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம் மாவட்ட கிராமிய, நாடகக் கலைஞா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகம் முழுவதும் நாடகம், நாட்டுப்புறக் கலைஞா்கள், குடும்பத்தினா் சுமாா் 20 லட்சம் போ் உள்ளனா். கரோனா காலத்தில் இந்த கலைஞா்கள் வருவாய் இன்றி பாதிப்படைந்துள்ளனா். வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அனைத்து கலைஞா்களுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அரசு சாா்பில் 35,000 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அந்த உதவித்தொகை போதுமானது அல்ல, நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்.

கலை பண்பாட்டுத் துறையின் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து கலைஞா்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். மூத்த கலைஞா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT