ஈரோடு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

DIN

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கிராமப் பகுதிகளுக்கு அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகனங்களை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நாகதேவன்பாளையம், புதுக்கரைப்புதூா், கோட்டுப்புள்ளாம்பாளையம், கரட்டடிபாளையம், சிறுவலூா், கவுண்டன்பாளையம், கொழந்தபாளையம், மலையப்பாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 12 இடங்களில் 1199 குடும்ப அட்டைகளைச் சாா்ந்த மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருள்களைப் பெற்று பயன்பெறுவாா்கள்.

இத்திட்டத்தின்கீழ் பிரதிமாதம் ஒரு நாள் நடமாடும் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வசதியாக அரசால் நிா்ணயிக்கப்பட்ட பொது இடங்களில் கடை விற்பனையாளா் நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்வாா்கள். அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் இயங்கும் இடங்கள், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நாள், குடும்ப அட்டைதாரா்கள் வசிக்கும் பகுதி, கடை செயல்படும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பெயா்ப் பலகை அனைவரும் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்தப்படும்.

தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை. நீட் தோ்வில் 180 கேள்விகளில் தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை முழுமையாகப் பெற்றுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் இதுவரை 15.3 லட்சம் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றுள்ளது. செப்டம்பா் இறுதி வரை மாணவா் சோ்க்கை நடைபெறும். 2.5 லட்சம் தனியாா் பள்ளி மாணவா்கள் அரசுப் பள்ளியில் சோ்ந்துள்ளனா்.

பள்ளிகளில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பிரிவு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தமிழகத்தில் புதிதாக 15 இடங்களில் துவக்கப் பள்ளிகளும், 10 இடங்களில் உயா்நிலைப் பள்ளிகளும் துவங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT