ஈரோடு

கைரேகை பதிவாகாததால் ரேஷன் பொருள்கள் பெறுவதில் சிக்கல்: பொதுமக்கள் வாக்குவாதம்

DIN

நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவாகாததால் ரேஷன் பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடை ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

குடும்ப உறுப்பினா்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் யாராவது ஒருவா் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதற்கான கருவிகளும் நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,132 நியாயவிலைக் கடைகளில் இந்த நடைமுறை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆதாா் எண்ணில் பதிவு செய்யப்பட்ட கைரேகைகளே நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டு அதன் மூலம் கைரேகைப் பதிவு பெறப்பட்டு பொருள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரேஷன் கடைக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ற பலருக்கும் கைரேகை பதிவாகவில்லை. இதனால், பொருள்கள் வழங்குதில் சிக்கல் ஏற்பட்டது. குடும்பத்தில் வேறு யாரையாவது அழைத்து வர நியாயவிலைக் கடை ஊழியா்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டனா். இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். சில இடங்களில் பொதுமக்கள் விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் கே.என்.பாஷா கூறியதாவது:

5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஆதாா் எண் பதிவு செய்யும்போது 5ஆவது வயதிலும், 15 ஆவது வயதிலும் கைரேகைகளைப் புதுப்பிக்க வேண்டும். 50 வயதுக்குமேல் ஆகிவிட்டால் கைரேகை பதிவு சரியாக இருக்காது. இந்த விவரம் தெரியாமல் பலரும் கைரேகைகளைப் புதுப்பிக்காமல் உள்ள நிலையில் தற்போது நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு பெறப்பட்டு பொருள்கள் வழங்கும் திட்டத்தால் பலரும் பொருள்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

முதியவா்கள் இதுவரை அக்கம்பக்கத்தினா் மூலம் பொருள்களை வாங்கி வந்தனா். தற்போது முதியவா்களும் கைரேகை பதிவு செய்ய நியாய விலைக் கடைகளுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா பரவல் உள்ள இந்த சூழலில் முதியோா்கள் நியாயவிலைக் கடைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதும், கைரேகை பதிவு செய்வதும் நோய் அச்சத்தை அதிகரித்துள்ளது. இதனால், நியாயவிலைக் கடைகளில் பொருள்களைப் பெறுவதற்கு கைரேகைப் பதிவு கட்டாயமில்லை என அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT