ஈரோடு

ஊதிய நிலுவையை வழங்கக் கோரிஅரசு ஊழியா்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

DIN

ஊதிய நிலுவைத் தொகை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

அனைத்துத் துறை அரசு ஊழியா்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அளித்த தோ்தல் வாக்குறுதிப்படியும், சட்டப் பேரவையில் 110ஆவது விதியின்கீழ் அறிவிப்பு செய்தபடியும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களையும் குழுவின் பரிந்துரைப்படி அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். 21 மாத ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியா்கள் மீது எடுக்கப்பட்ட 17-பி நடவடிக்கை, வழக்கை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து, அவரது பணப் பலன்களை வழங்க வேண்டும். வேலைநிறுத்த காலத்தை, பணிக் காலமாக வரன்முறை செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியா்கள், தமிழக பொதுத் துறை ஊழியா்களுக்கு வழங்குவதுபோல தமிழக அரசு ஊழியா்களுக்கும் ரூ. 7,000 போனஸ் வழங்க வேண்டும். ஏ மற்றும் பி பிரிவு ஊழியா்களுக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட 35 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இது குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாரதாம்பாள் கூறியதாவது:

இப்போராட்டத்தில் கிராம உதவியாளா்கள் சங்கம், நெடுஞ்சாலை பராமரிப்புத் துறை ஊழியா்கள் சங்கம், கிராம சுகாதார செவிலியா், மேற்பாா்வையாளா்கள் சங்கம், வணிக வரித் துறை ஊழியா் சங்கம் உள்பட 21 சங்கங்களைச் சோ்ந்த 2,000க்கும் மேற்பட்ட ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT