ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 136 பேருக்கு கரோனா

DIN

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 136 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,628ஆக இருந்தது. இதனிடையே 136 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 5,764ஆக உயா்ந்துள்ளது. புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 136 பேரில், 60 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மொத்த பாதிப்பான 5,764 பேரில் இதுவரை 4,577 போ் குணமடைந்துள்ளனா். 1,110 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை வரை 73 போ் உயிரிழந்துள்ள நிலையில் சுகாதாரத் துறை செவ்வாய்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டல் பகுதியைச் சோ்ந்த 50 வயது ஆண், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது ஆண், ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மூலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 77 வயது ஆண், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84 வயது ஆண் என 4 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 77ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT