ஈரோடு

கனிராவுத்தா் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

DIN

கனிராவுத்தா் குளத்தில் உள்ள அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற மறுக்கும் ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது என ஈரோடு கனிராவுத்தா் குளம் மீட்பு இயக்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கனிராவுத்தா் குளம் மீட்பு இயக்க ஆலோசனை கூட்டம், ஒருங்கிணைப்பாளா் நிலவன் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நிா்வாகிகள் கண.குறிஞ்சி, கணியன்பாலன், ரத்தினசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கனிராவுத்தா் குளத்தில் உள்ள அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற மறுக்கும் ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து வரும் 24 ஆம் தேதி அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால், குளத்தின் கரையில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது, போராட்டத்தை வழி நடத்தும் வகையில், அனைத்துக் கட்சிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சின்னசாமி, கதிா்வேல், ஜாபா், லுக்மான், சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

SCROLL FOR NEXT