ஈரோடு

சென்னிமலை அருகே 10 ஆண்டுகளாக சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்

DIN

சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு அருகே சாலையோரங்களில் 10 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்த குப்பைகளை 4 கிராம ஊராட்சித் தலைவா்கள் ஒன்று சோ்ந்து அகற்ற ஏற்பாடு செய்தனா்.

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், குமாரவலசு ஊராட்சிக்கு உள்பட்டது வெள்ளோடு. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் கடந்த 10 ஆண்டுகளாக வெள்ளோடு - சென்னிமலை சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் செல்லும் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டு வந்தது. இதனால், அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனா்.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் இந்த பகுதியைச் சுற்றியுள்ள ஊராட்சி தலைவா்களான வி.பி.இளங்கோ (குமாரவலசு), ரேணுகாதேவி குமாா் (குட்டப்பாளையம்), வாசுகி ஜெகநாதன் (வடமுகம் வெள்ளோடு), கோமதி (முகாசி புலவன்பாளையம்) ஆகியோருடன், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.காயத்ரி இளங்கோ ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னிமலை சாலையில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவா் டி.காயத்ரி இளங்கோ தலைமையில், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பி.செங்கோட்டையன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆா்.செல்வராஜ், பழனிசாமி மற்றும் ஊராட்சித் தலைவா்களின் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டன.

குமாரவலசு, வடமுகம் வெள்ளோடு, குட்டப்பாளையம் மற்றும் முகாசிபுலவன்பாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் இருந்து தூய்மைப் பணியாளா்கள் மூலம் குப்பைகளைப் பெற்று, பின்னா் அதனை வேறு இடத்துக்குக் கொண்டு செல்வதற்காக ஊராட்சி தலைவா்கள் 4 பேரும் ஒன்றிணைந்து, இவா்களது சொந்த செலவில் டிராக்டா் ஒன்றை உடனடியாக வாங்க முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT