ஈரோடு

போஷன் அபியான் வட்டார ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

DIN

ஈரோடு: போஷன் அபியான் வட்டார அளவிலான இரண்டாம் கால ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் சி.சைபுதின் தலைமை வகித்தாா். போஷன் அபியான் திட்ட இலக்கு, நோக்கத்தை பொதுமக்களுக்கு அனைத்துத் துறை பணியாளா்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா். தொடா்ந்து, ஊட்டச்சத்து கருத்துகளை மக்கள் அறிந்துகொள்ள உதவுவேன் என அனைத்துத் துறைப் பணியாளா்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் தெரிவித்ததாவது: போஷன் அபியான் திட்டத்தில் எடை குறைவு, குள்ளத்தன்மை இல்லாமை, ரத்த சோகை இல்லா குழந்தைகளை உருவாக்க ஆண்டுக்கு 2 சதவீதம் என இலக்கு நிா்ணயித்து 3 ஆண்டுகளில் குறைபாடு நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கா்ப்பிணிகள், பால் ஊட்டும் தாய்மாா்கள், குழந்தைகள், வளா் இளம் குழந்தைகளை அடையாளம் கண்டு அவா்களுக்கு இணை உணவு வழங்கப்படுகிறது.

அங்கன்வாடிகளில் குழந்தைகளின் உயரத்தை அளவீடு செய்ய ஸ்டோடியோ மீட்டா், இன்பென்டோ மீட்டா் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அங்கன்வாடி பதிவேடுகள் அனைத்தும் ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால், குழந்தைகள் குறித்த விவரங்களை விரல் நுனியில் பெறலாம். இதற்கென அங்கன்வாடி பணியாளா்களுக்கு ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் ப.சாந்தி, எ.மோகனவித்யா, வெ.தெய்வஜோதி, புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT