ஈரோடு

ஈரோட்டில் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

31st Oct 2020 08:30 PM

ADVERTISEMENT

ஈரோடு தாலுகாவுக்கு உட்பட்ட பிச்சாண்டாம்பாளையம், கதிரம்பட்டி , கூரபாளையம் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்ற சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடந்தது.

ஈரோடு அடுத்த மேட்டுக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே .வி .ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 363 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனை பட்டா ஓய்வு ஊதியம் புதிய தொகுப்பு வீடு, வடிகால் வசதி சம்பந்தமான  மனுக்கள் அதிக அளவில் வந்திருந்தன. முன்னதாக 30 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையையும், 11 பேருக்கு மின்னணு ரேஷன் கார்டும், 26 பேருக்கு இலவச வேட்டி சேலையும் வழங்கப்பட்டன.

இதனை கலெக்டர் கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம் கே எஸ் தென்னரசு ஆகியோர் வழங்கினர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இளங்கோ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள், ஆர்டிஓ சைபுதீன், தாசில்தார் பரிமளா தேவி, பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீஷ் , கோவிந்தராஜ், தங்கமுத்து, ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார்,   ஆவின் துணைத் தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT