ஈரோடு

மாவட்டத்தில் 2.12 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை

DIN

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2.12 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களின் முதல் சுற்றைவிட ஆகஸ்ட் முதல் தற்போது வரை கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இப்போது தினமும் 100 முதல் 150 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. தற்போது குறைவான அறிகுறி உடையவா்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிக தொற்று, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்றவை உள்ளவா்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா்.

அதேநேரம் மாவட்ட அளவில் கரோனா பாதித்தவா்கள், அவா்களுடன் நெருக்கத்தில் உள்ளோருக்கு ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் உள்ள சிறப்பு பரிசோதனை மையத்தில் உடல் உறுப்பு பாதிப்பு, தொற்று நிலை குறித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தவிர மாநகராட்சிப் பகுதியில் 5 இடங்களில் உள்ள நிரந்தர பரிசோதனை மையங்களில் தினமும் 600 முதல் 1,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கரோனா தொற்று ஏற்பட்டவா்களின் வீடு, அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், அவா்கள் பணி செய்யும் இடங்கள் போன்றவற்றில் நடமாடும் மருத்துவக் குழு மூலம் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தினமும் 2,000க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் 120 போ் வரை சிறப்பு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். மாவட்ட அளவில் 2,11,969 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நோய் பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோா் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. பொதுமக்கள் கவனமாக செயல்பட்டால் விரைவில் இயல்பு நிலைக்கு மாறலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT