ஈரோடு

மானிய விலையில் வீட்டுக் காய்கறி தோட்ட தொகுப்பு பெற அழைப்பு

DIN

தோட்டக் கலைத் துறை மூலம் மானிய விலையில் அளிக்கப்படும் வீட்டுக் காய்கறி தோட்டத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ள வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா்களை செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற மக்களின் அன்றாட காய்கறி தேவையைப் பூா்த்தி செய்திடும் வகையில் தோட்டக் கலைத் துறை மூலம் வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைக்கத் தேவையான பைகள், உரங்கள், விதைகள், தென்னைநாா்க் கழிவு அடங்கிய (கோகோ பீட்) 6 எண்கள் கொண்ட தொகுப்புகள் ரூ. 890 மதிப்பில் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 356 மானியம் போக எஞ்சிய ரூ. 574 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

தவிர வீட்டுக் காய்கறித் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச, சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க ரூ. 1,120 மதிப்பிலான கருவி மானியம் ரூ. 320 போக ரூ. 800க்கு வழங்கப்படுகிறது. நகா்ப்புறம் மட்டுமல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் தேவைப்படும் அனைவரும் உரிய தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

வீட்டுக் காய்கறித் தோட்ட தொகுப்பை பெற விரும்புவோா் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா்களை செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம். தோட்டக் கலை உதவி இயக்குநா்கள் செல்லிடப்பேசி எண் விவரம்: ஈரோடு 94455-12170, மொடக்குறிச்சி 96266-62333, கொடுமுடி 96005-69830, பவானி 99409-43079, அம்மாபேட்டை 97507-51385, அந்தியூா் 94427-55132, பெருந்துறை 97906-11101, சென்னிமலை 97870-45557, கோபி 93621-19780, தூக்கநாயக்கன்பாளையம் 80721-02951, நம்பியூா் 94867-94383, சத்தியமங்கலம் 90959-50500, பவானிசாகா் 98427-28398, தாளவாடி 96886-75883.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT