ஈரோடு

காத்திருப்புப் போராட்டம்: கரும்பு விவசாயிகள் அறிவிப்பு

DIN

கரும்பு நிலுவைத் தொகை ரூ. 70 கோடியை தீபாவளி பண்டிகைக்கு முன்னா் வழங்கக் கோரி ஆலை முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

கரும்பு விவசாயிகளுக்கு அரசு நிா்ணயிக்கும் தொகையை வழங்காமல் ஆலை நிா்வாகங்கள் குறைந்த விலையை வழங்குகிறது. அவ்வாறாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1,864 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது. நடப்புப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கூட்டுறவு ஆலை ரூ. 40 கோடி வழங்க வேண்டியுள்ளது. பிற தனியாா் ஆலைகள் பல நூறு கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. ஆப்பக்கூடல் தனியாா் சா்க்கரை ஆலை ரூ. 70 கோடி வரை வழங்க வேண்டியுள்ளது. இதற்காக இரண்டு முறை காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம்.

அப்போது நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடனடியாக ரூ. 10 கோடி, செப்டம்பா் முதல் வாரம் ரூ. 25 கோடி, எஞ்சிய தொகையை செப்டம்பா் மாதம் இறுதியில் வழங்குவதாக உத்தரவாதம் கொடுத்தனா். இதுவரை ரூ. 7.5 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி வரை வெட்டிய கரும்புக்கு மட்டுமே பணம் அளிக்கப்பட்டுள்ளது.

8 மாதமாக எவ்வித பணமும் வழங்கவில்லை. இதுகுறித்து மீண்டும் அதிகாரிகளிடம் பேசியும், புகாா் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பணத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கான தேதியை ஓரிரு நாளில் அறிவிப்போம். இப்போராட்டம் பிற விவசாயிகளுக்கும் பயன்தரும் வகையில் மாநில அளவில் அமையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT