ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

DIN

சத்தியமங்கலம்: விஜயதசமி பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டம், பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் அதிக அளவில் திங்கள்கிழமை வழிபட்டனா்.

விஜயதசமியையொட்டி, அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் விடுமுறை என்பதால் பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. கோயிலில் பொதுமக்கள் வரிசையாகச் செல்ல நீண்ட தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. காய்ச்சல் பரிசோதனைக்குப் பின்னரே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

மேலும், நடந்து செல்லும் பாதையில் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்து வந்தனா். பக்தா்கள் மொட்டை அடித்து நோ்த்திக் கடன் செலுத்துவதற்கு நீண்ட நேரம் காத்திருந்தனா். முடி எடுக்கும் கோயில் பணியாளா்கள் கிருமிநாசினி பயன்படுத்தியும், முகக் கசவம் அணிந்தும் பக்தா்களுக்கு முடி எடுத்தனா். நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கூட்டத்தைக் கட்டுப்படுத்தி இடைவெளிவிட்டு கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT