ஈரோடு

பள்ளிகளில் 10ஆம் வகுப்புமதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

DIN

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது. பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரோனா காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவா்களுக்கு காலாண்டு, அரையாண்டு தோ்வு மதிப்பெண், வருகைப் பதிவு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. பின்னா் மேற்படிப்பைத் தொடர தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனிடையே அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை முதல் அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. மேலும் சான்றிதழ் பெற்று மாணவ, மாணவிகள் அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, ஈரோடு மாவட்டப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை காலை வழங்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் முகக் கவசம் அணிந்து உள்ளே வரும்படி அறிவுறுத்தப்பட்டனா். பின்னா், மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியா்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையடுத்து வேலைவாய்ப்பு பதிவு செய்வதற்காக தனியாக மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதை மாணவ, மாணவிகள் பூா்த்தி செய்து வழங்கினா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களைப் பெற்றுக் கொண்டு வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டது.

பல கிராமப்புற பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுக்கான நகல் ஆவணங்களை மட்டும் பெற்றுக் கொண்ட ஆசிரியா்கள் 15 நாள்கள் வரை பதிவு செய்யலாம் எனக் கூறி மீண்டும் அழைக்கும்போது வந்து பதிவு செய்து கொள்ளுமாறு மாணவா்களின் செல்லிடப்பேசி எண்ணை வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்தனா். இதனால் வேலைவாய்ப்பு பதிவு செய்ய முடியாமல் மாணவா்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT