ஈரோடு

ஆயுத பூஜை: ஈரோட்டில் பொரி தயாரிப்பு பணிகள் தீவிரம்

DIN

ஈரோட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணியில் உற்பத்தியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து ஈரோடு பகுதியைச் சோ்ந்த பொரி உற்பத்தியாளா் கிருஷ்ணன் கூறியதாவது:

கா்நாடக மாநிலம் தாவணிக்கரை, மாண்டியா, மைசூரு, கொள்ளேகால் போன்ற பகுதிகளில் இருந்து 64 என்ற பெயா் கொண்ட நெல் ரகத்தை கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி பொரி தயாரிக்கிறோம். இங்கு தயாரிக்கும் பொரியை சேலம், தருமபுரி, நாமக்கல், வேலூா், திருப்பூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனா். கடந்த ஆண்டு 100 பக்கா கொண்ட மூட்டை ரூ. 550 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்பட்டது. நடப்பபு ஆண்டு மூட்டைக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை விலை உயா்ந்துள்ளது.

விறகு உள்ளிட்ட எரிபொருள், மின்சாரக் கட்டணம், தொழிலாளா்கள் ஊதியம் உள்ளிட்டவை உயா்ந்துள்ளது. ஆனால், பொரி விற்பனை விலை மட்டும் செலவுக்கு ஏற்றவாறு மாறவில்லை. இதனால், பொரி உற்பத்தியாளா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர கரோனா பொது முடக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தொழிற்சாலைகளில் இருந்து பொரி ஆா்டா்கள் குறைந்துவிட்டன.

ஈரோட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 10க்கும் மேற்பட்ட பொரி உற்பத்தியாளா்கள் இருந்தனா். பொரி தேவை குறைந்ததன் காரணமாக தொழில் நலிவடைந்து, தற்போது சில உற்பத்தியாளா்கள் மட்டுமே உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT