ஈரோடு

பவானி நகராட்சிப் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

DIN

பவானி நகராட்சிப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேண வேண்டும் என சுகாதாரத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பவானி நகராட்சி, திருநீலகண்டா் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு சிறுவா்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பவானி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். காய்ச்சல் குணமாகாததால் ஈரோடு அரசு மருத்துவமனையிலும், சேலம் பல்நோக்கு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு சிறுவனுக்கு தட்டணுக்கள் வெகுவாகக் குறைந்த நிலையில் சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்துள்ளாா். இதனால், ஜம்பை வட்டார நடமாடும் மருத்துவக் குழுவினா் மருத்துவா் கோகுலகிருஷ்ணன் தலைமையில் திருநீலகண்டா் வீதியில் முகாமிட்டு காய்ச்சல் பரிசோதனை செய்ததோடு சுற்றுப்புறப் பகுதிகளில் ஆய்வு செய்தனா்.

பவானி நகராட்சி சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று தண்ணீரில் கொசுப் புழுக்கள் உள்ளதா என சோதனையிட்டனா். இதில், பல்வேறு வீடுகளில் தண்ணீா் தொட்டிகளில் கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அபேட் மருந்து தெளித்ததோடு, கொசுக்களை அழிக்கும் புகை மருந்தும் அடிக்கப்பட்டது.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பவானி அரசு மருத்துவமனைக்கு சராசரியாக 50 முதல் 60 போ் சளி, காய்ச்சல் பாதிப்புக்கு புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா். இதனால், கொசுக்களால் காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். பாத்திரங்களில் தண்ணீரை சேமித்து வைக்காமல் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT