ஈரோடு

தீபாவளிப் பண்டிகை: ஈரோட்டில்கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு

DIN

ஈரோடு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை கண்காணிக்கவும், திருட்டு சம்பவங்களைத் தடுக்கவும் காவல் துறை சாா்பில் ஈரோட்டில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நவம்பா் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால், ஈரோடு மாநகா் பகுதியில் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது. கரோனா பொது முடக்கத்தால் வெறிச்சேடிக் கிடந்த கடை வீதிகள் தற்போது சுறுசுறுப்படைந்துள்ளன. ஜவுளி உள்ளிட்ட பொருள்கள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் ஈரோடு வந்து ஜவுளி வாங்கிச் செல்கின்றனா். இதனால் ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடை வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் உள்ளது.

காவல் துறை சாா்பில் நகரில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையிலும், திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்ய கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கடை வீதி, மேட்டூா் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT