ஈரோடு

கரோனா உதவித் தொகைவழங்கக் கோரிக்கை

DIN

ஈரோடு: விண்ணப்பித்த அனைவருக்கும் கரோனா உதவித் தொகையை வழங்க வேண்டும் என தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்க மாவட்டத் தலைவா் பி.சாம்பசிவம், மாவட்டச் செயலாளா் எ.ரஞ்சித், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

தமிழகத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்யாத அனைத்து முடி திருத்தும் தொழிலாளா்களுக்கும் கரோனா தொற்று கால நிவாரண உதவித் தொகையாக ரூ. 2,000 வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.

ஈரோடு மாவட்டத்தில் நிவாரணத் தொகை கோரி விண்ணப்பித்த 4,000 பேரில் 2,500 பேருக்கு மட்டுமே உதவித் தொகை கிடைத்தது. மீதமுள்ள 1,500 பேருக்கு கிடைக்கவில்லை. விடுபட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT