ஈரோடு

ஈரோடு: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு  புதிய நிர்வாகிகள் தேர்வு

18th Oct 2020 06:41 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈரோடு மாவட்ட கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்ட கிளையில் நிர்வாகிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்படி, மாவட்ட கிளை தேர்தல் ஈரோட்டில் நேற்று நடந்தது. தேர்தல் ஆணையராக கோவை மாவட்ட செயலாளர் அரசு முன்னிலையில் தேர்தல் நடந்தது. 

இத்தேர்தலில் நிர்வாக பதவிகளுக்கு தலா ஒருவர் என்ற வீதத்தில் மட்டுமே போட்டியிட்டதால், நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில், மாவட்ட தலைவராக அ.மதியழகன், மாவட்ட செயலாளராக வி.எஸ்.முத்து ராமசாமி, மாவட்ட பொருளாளராக ஆர்.தங்கராஜ் ஆகியோருக்கு தேர்தல் ஆணையர் அரசு முன்னிலையில் ஈரோடு மாவட்ட கிளையின் நிர்வாகிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். 

இதேபோல், மாவட்ட துணை தலைவர்களாக சதீஸ்குமார், பாலுசிவக்குமார், சுரேஷ்குமார், திருவாசகமணி, பாண்டியராஜன், கயல்விழி, மாவட்ட துணை செயலாளர்கள் சுதாகர், திருமுருகன், டென்னிஸ் வில்சன், சண்முகம், ராஜ்கமல், அனுராதா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், ரமேஷ்குமார், அன்புச்செல்வி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக பாக்கியலட்சுமி, ரஞ்சிதம், திலகவதி, அமுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

ADVERTISEMENT

புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஈரோடு மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
 

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT