ஈரோடு

ஈரோட்டில் அதிமுக 49ஆம் ஆண்டு தொடக்க விழா

18th Oct 2020 06:51 PM

ADVERTISEMENT

அதிமுக தொடங்கப்பட்டு 49ஆவது ஆண்டு ஆவதை முன்னிட்டு அதன் தொடக்க விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பெரியசேமூர் அடுத்த தண்ணீர்பந்தல் பாளையம் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால் தலைமை தாங்கினார். 

எம்எல்ஏக்கள் கே.வி ராமலிங்கம். தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். அதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியில் இருந்து விலகி எம்எல்ஏக்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ் கோவிந்தராஜ் தங்கமுத்து மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் வீரகுமார் மாரிமுத்து ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT