ஈரோடு

பவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7-ஆம் ஆண்டு கொடியேற்று விழா

28th Nov 2020 06:43 PM

ADVERTISEMENT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பவானியை அடுத்த லட்சுமி நகர் புறவழிச்சாலை பிரிவில் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மத்திய மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பி.விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாநில பொதுச் செயலாளர் விடியல் எஸ்.சேகர்,  மாநில செயற்குழு உறுப்பினர் எம்.செல்வராஜ், மாவட்ட உயர் மட்டக் குழு உறுப்பினர் கௌதமன், வட்டாரத் தலைவர் புவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் கட்சிக் கொடி ஏற்றினார். கட்சி தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தமிழக மக்களின் நலனுக்காக ஆற்றிய பணிகள், கொள்கைகள் குறித்து விழாவில் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாவட்ட தொழில் சங்கத் தலைவர் ஆவின் சுப்பிரமணியம், மாவட்ட செய்தி தொடர்பாளர் பி.சுரேஷ்குமார், நிர்வாகிகள் கண்ணன், வாசு, சிகாமணி, ரபிக், கண்ணம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT


 

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT