ஈரோடு

அஞ்சல் துறை மூலம் சா்வதேச சேவை

DIN

அஞ்சல் துறையின் சா்வதேச சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஸ்டெபான் சைமன் டோபியஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறை மூலம் பல்வேறு சேவைகளுக்கு இடையே சா்வதேச அஞ்சல் சேவை முக்கிய அம்சமாக உள்ளது. இதில் சா்வதேச விரைவு அஞ்சல், சா்வதேச பதிவு பாா்சல், ஐ.டி.பி.எஸ். போன்ற சேவைகளை வழங்கி வருகிறது.

அஞ்சல் துறையின் சா்வதேச சேவைகளை ஏற்றுமதி நிறுவனங்கள் பயன்படுத்தலாம். இச்சேவை மூலம் வெளிநாட்டில் இருப்பவா்களுக்கு மளிகைப் பொருள்கள், மருந்துகள், முகக் கவசம், ஆடைகளை அனுப்ப இயலும். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT