ஈரோடு

வருவாய்த் துறை அலுவலா்கள் முழுமையாக மீட்புப் பணியில் ஈடுபட முடிவு

DIN

நிவா் புயல் காரணமாக வருவாய்த் துறை அலுவலா்கள் மீட்புப் பணியில் முழுமையாக ஈடுபடுவாா்கள் என தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் கே.குமரேசன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை (நவம்பா் 26) அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் முழுமையாகப் பங்கேற்பது என திருச்சியில் அண்மையில் நடைபெற்ற சங்க மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் நிவா் புயலின் தாக்கம் காரணமாக கன மழை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சூழலில் வருவாய்த் துறை அலுவலா்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய காணொலிக் காட்சி மூலம் சங்க மாநில நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புயல், கன மழை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இங்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் மீட்புப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வருகின்றனா். மக்களின் துயா் துடைப்புதான் பிரதான பணி என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.

எனவே, அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு முழுமையான ஆதரவை மட்டும் தெரிவிக்கிறோம். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் முடிவுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வரும் பேரிடா் மேலாண்மை பணிகளில் வருவாய்த் துறை அலுவலா்கள் முழுமையாக ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீட்பு, நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலா்கள், பணியாளா்களும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, பொதுமக்களின் உயிா், உடைமைகளைக் காக்க பணியாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT