ஈரோடு

உள்ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்த மாணவியருக்குப் பாராட்டு

DIN

பவானியை அடுத்த கவுந்தப்பாடி, பி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று உள் ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்த மாணவியருக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், கல்வி ஊக்கத்தொகை வழங்கி புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

கவுந்தப்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற திருச்செல்வி, சென்னை இஏஐ மருத்துவக் கல்லூரியிலும், ஏ.தரணிபிரியா, கோவை மருத்துவக் கல்லூரியிலும், ஜி.எஸ்.சுபாஷினி கரூா் அரசு மருத்துவக் கல்லூரியிலும், எம்.சோனிகா ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியிலும் சோ்க்கை பெற்றனா். பி.மேட்டுப்பாளையம் அரசுப் பள்ளி மாணவி சி.எஸ்.மாலினி அன்னபூா்ணா மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்றாா்.

தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் மருத்துவக் கல்விக்கு வழங்கிய 7.5 சத உள்ஒதுக்கீட்டின் மூலம் இவா்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றதோடு, கலந்தாய்வின் மூலம் மருத்துவக் கல்லூரிகளையும் தோ்வு செய்தனா்.

இவா்களுக்கு கவுந்தப்பாடி முகாம் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் தலா ரூ. 20 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை, பரிசுகள் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா். மாவட்ட அண்ணா தொழில்சங்கச் செயலாளா் கே.ஆா்.ஜான், கவுந்தப்பாடி ஊராட்சித் தலைவா் தங்கமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT