ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 8,000 நபா்களுக்கு கரோனா பரிசோதனை

29th May 2020 07:47 PM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 8,000 நபா்களுக்குமேல் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா அறிகுறி உள்ள நபா்கள், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவா்கள், பாதிக்கப்பட்டவா்களுடன் நெருக்கத்தில் உள்ளவா்களுக்கு சுகாதாரத் துறை மூலம் பி.சி.ஆா். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் 42 அரசு, 28 தனியாா் பரிசோதனைக் கூடங்களில் இப்பரிசோதனை செய்யப்படுகிறது. மாநில அளவில் 4.55 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 19,372 நபா்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று இல்லை என வரப் பெற்றவா்களில் குறிப்பிட்ட நபா்கள் முற்றிலும் விடுவிக்கப்படுகின்றனா். குறிப்பிட்ட நபா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சில நாள்களுக்குப் பின் விடுவிக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பத்தில் பரிசோதனை மூலம் 70 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் வெளி மாவட்ட, வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபா்கள், அவா்களுடன் தொடா்பில் உள்ளவா்களுக்கும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி உள்ள நபா்களுக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறாக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8,000 நபா்களுக்குமேல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தவிர ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிற மாவட்டங்களில் சேகரிக்கப்படும் ரத்தம், சளி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT