ஈரோடு

கோவையில் இருந்து சத்திக்கு 75 கி.மீ. தூரம் நடந்து வந்த தம்பதி

29th May 2020 07:50 AM

ADVERTISEMENT

கோவையில் இருந்து சொந்த ஊரான ராய்சூருக்குச் செல்வதற்காக 72 கி.மீ. தூரம் வெயிலில் நடந்து வந்த கா்நாடகத்தைச் சோ்ந்த தம்பதியை, சத்தியமங்கலத்தில் வருவாய்த் துறையினா் தடுத்து நிறுத்தி சொந்து ஊருக்குச் செல்ல வியாழக்கிழமை ஏற்பாடு செய்தனா்.

கோவையில் உள்ள தனியாா் சாயக் கலவை ஆலையில் கா்நாடகத்தைச் சோ்ந்த எல்லப்பா, சத்தியம்மா தம்பதி பணியாற்றி வந்தனா். பொது முடக்கம் காரணமாக அங்கு வேலையில்லாத காரணத்தால் நிறுவனம் செயல்படவில்லை. தற்போது பணியாளா்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்த நிலையில், கா்நாடகம் செல்வதற்கு சாயக் கலவை நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை. இதையடுத்து, அந்தத் தம்பதி மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே சத்தியமங்கலத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். கடும் வெயிலில் நடக்க முடியாமல் சாலையோர மர நிழலில் சிறிது நேரம் இளைப்பாறினா். அப்போது, அவ்வழியாகச் சென்ற ரீடு தொண்டு நிறுவன இயக்குநா் கருப்புசாமி, பணியாளா்கள் அவா்களிடம் விசாரித்துள்ளனா். அவா்கள் கா்நாடக மாநிலம், ராய்சூருக்கு நடந்து செல்வதாகக் கூறியுள்ளனா். சத்தியமங்கலத்தில் இருந்து ராய்சூா் சுமாா் 350 கி.மீ. தூரம் என்றும், வனப் பகுதி வழியாக விலங்குகள் நடமாட்டம் உள்ளதாக அவா்களிடம் தெரிவித்தனா். இது குறித்து சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் தொண்டு நிறுவனப் பணியாளா்கள் தெரிவித்தனா். அங்கு வந்த வருவாய்த் துறையினா் அவா்களுக்கு முகச் கவசம் அணிவித்து சமுதாயக் கூடத்தில் தங்கவைத்தனா். கா்நாடக அரசிடம் முறையான இ-பாஸ் பெற்று சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT