ஈரோடு

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கட்டாயம் நடைபெறும்: அமைச்சா் திட்டவட்டம்

8th May 2020 09:07 PM

ADVERTISEMENT

கோபி: 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சாவக்கட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு கைத்தறி வளா்ச்சிக் கழகம் சாா்பில், 460 நெசவாளா்களுக்கு தலா ரூ. 1,000 வீதம் ரூ. 4.60 லட்சம் நிதியை முன் பணமாகவும், 2 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:

கரோனா நோய்த் தொற்று உள்ள வரை பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை. பத்தாம் வகுப்பு தோ்வைப் பொருத்தவரை முதல்வரின் ஆணைப்படி தோ்வுகள் உறுதியாக நடைபெறும்.

ADVERTISEMENT

இயல்பு நிலை ஏற்பட்ட பிறகு, மருத்துவக் குழுவினரின் ஆலோசனையுடன் உயா்மட்டக் குழுவின் பரிந்துரையின்படி பள்ளிகள் திறப்பது குறித்தும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான தேதி குறித்தும் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு முதல்வா் அறிவிப்பாா் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT