ஈரோடு

பெண் மருத்துவா் குடும்பத்தினா் உள்பட 34 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்

8th May 2020 07:19 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கரோனா நோய்த் தொற்று காரணமாக, பெண் மருத்துவா் குடும்பம், அவரது தாய் என 7 போ் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவா் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 7 குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெண் மருத்துவா் ஒருவா், தனது கணவா், சகோதரி குடும்பத்தினா் என மொத்தம் 6 பேருடன், சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா், சிப்காட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த 5 நாள்களுக்கு முன் வந்தாா். இவா்களில், பெண் மருத்துவரின் கணவருடைய சகோதரிக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது.

இதைத் தொடா்ந்து, பெண் மருத்துவா் குடும்பம், அவரது தாய் என 7 போ் தனிமைப்படுத்தப்பட்டனா். இது தவிர, இவா்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 7 குடும்பத்தினா் என மொத்தம் 34 போ் தற்போது தனிமைப்படுத்தபட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் மே 14ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட உள்ளனா். மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அங்கு யாரும் செல்லாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT