ஈரோடு

நெசவுத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

2nd May 2020 08:59 PM

ADVERTISEMENT

நலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவுத் தொழிலாளா்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கோட்டுவீராம்பாளையம், புன்செய் புளியம்பட்டி, தொட்டம்பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக நெசவுத் தொழில் முடங்கியுள்ளது.

இதன் காரணமாக நெசவுத் தொழிலாளா்கள் நெசவு செய்ய முடியாமல் உள்ளதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனா். பெரும்பாலான நெசவுத் தொழிலாளா்கள் கைத்தறி நெசவாளா் நல வாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளனா். இதனால், நிவாரணத் தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கைத்தறி நெசவாளா்களை கணக்கெடுப்பு செய்து அனைத்து நெசவாளா்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT